மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வழக்கு: தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தது நீதிமன்றம்..

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வழக்கு: தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்தது நீதிமன்றம்..

அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.

அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கிய அவசர சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற தீபக் தரப்பின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக, அதை அரசுடமையாக்குவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

  இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க அனுமதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் தீபக் தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.

  Also read... 'அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ - டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி..  அப்போது, பேரவை கூட்டம் நடைபெறுவதால் அவசர சட்டம், சட்டமாக நிறைவேற்றக்கூடும் என்பதால் அந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

  அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஒருவேளை சட்டமாக இயற்றப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடரும்படி தீபக் தரப்பிற்கு அறிவுறுத்தினர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: