Home /News /tamil-nadu /

மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து

மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பாக ஏபிவிபியின் முன்னாள் தேசிய தலைவர் மீதான வழக்கு ரத்து

 நீதிமன்றம்

நீதிமன்றம்

சென்னை நங்கநல்லூரில் கடந்த 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக, தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மருத்துவராக பணிபுரிந்து வந்த டாக்டர் சுப்பையா புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் கடந்த 2020 ஜூலை மாதம், அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னை காரணமாக, தனது எதிர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாசல் முன்பு சுப்பையா சண்முகம் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களை வீசிய வீடியோவும் வெளியானது. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில்,  சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டு ஜாமீன் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்கு ரத்து செய்ய வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நகைச்சுவை நடிகருக்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணை வந்தது. அப்போது இரு தரப்பிலும் சமரசமாக சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சுப்பையா தரப்பில் வாதிடப்பட்டது. இது ஏற்றுக் கொண்ட நீதிபதி டாக்டர் சுப்பையா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி