ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக மின் கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அதிகபட்ச கட்டணம் வசூலித்தது சட்டவிரோதம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், டான்ஜெட்கோவின் உத்தரவை ரத்து செய்தது.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக மின் கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 4:00 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காததால், 20 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்க டான்ஜெட்கோ-வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மீறி, 90 சதவீத கட்டணத்துடன், இழப்பீட்டையும் செலுத்தும்படி உத்தரவிட்ட டான்ஜெட்கோ, வசூல் நடவடிக்கைகளை தொடர்ந்தது.

இதை எதிர்த்து தொழிற்சாலைகள் சங்கங்களின் சார்பிலும், தொழிற்சாலைகள் சார்பில் தனிப்பட்ட முறையிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் இயங்காததால், அவை மின்சாரத்தை பயன்படுத்தவில்லை எனக் கூறி, அதிகபட்ச கட்டணம் வசூலித்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தார்.

கட்டண நிர்ணயம் தொடர்பான டான்ஜெட்கோ உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஊரடங்கு காலத்தில் செயல்படாததால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தொழிற்சாலைகளுக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிப்பது என்பது தங்க முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Also read... மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் புரியும்படி எழுதவேண்டும் - ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த தொழிற்சாலைகளுக்கான கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், ஏற்கனவே கட்டணத்தை வசூலித்திருந்தால், அடுத்த பில்களில் சரி செய்ய வேண்டும் எனவும் டான் ஜெட்கோ-வுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading