பாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இது குறித்த செய்தியை நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சி விரிவாக வெளியிட்டது. இதனை அடுத்து ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் ஆதி திராவிடர் நல அலுவலர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் ஆகியோர் நாராயணபுரத்தில் ஆய்வு செய்தனர்

பாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உடலை கட்டி பாலத்தின் வழியாக இறக்கும் உறவினர்கள்
  • News18
  • Last Updated: August 22, 2019, 6:43 PM IST
  • Share this:
வேலூரில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவரின் உடலை கொண்டு செல்ல பிற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாலத்தில் இருந்து இறக்கி எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்காக பாலாற்றையொட்டி சுடுகாடு அமைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றைக் கடக்க பாலம் கட்டப்பட்ட நிலையில், பாலாற்றின் இருபுறமும் உள்ள விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் ஆற்றுக்கு செல்லும் வழியை வேலி அமைத்து அடைத்தனர்.

இதனால் நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்கள், தங்கள் நிலத்தின் வழியே சடலத்தை எடுத்துச்செல்ல நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உடல்களை தகனம் செய்ய பாலாற்றின் கரைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.


கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதியை சார்ந்த குப்பன் என்பவர் விபத்தில் உயிரிழந்ததால், அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல நிலத்தின் உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி சடலத்தை கயிறு கட்டி பாலத்தின் மேல் இருந்து கீழே இறக்கி எரியூட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், ஆகஸ்ட் 26-ல் பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.முன்னதாக, இது குறித்த செய்தியை நேற்று நியூஸ் 18 தொலைக்காட்சி விரிவாக வெளியிட்டது. இதனை அடுத்து ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில் ஆதி திராவிடர் நல அலுவலர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் ஆகியோர் நாராயணபுரத்தில் ஆய்வு செய்தனர்.

Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading