ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை பராமரிக்க கோரி மனு - அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக கொண்டு வரும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை பராமரிக்க கோரி மனு - அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: October 19, 2019, 10:45 AM IST
  • Share this:
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை முறையாக சுகாதார முறையில் பராமரிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், தமிழகத்தில் 1,324 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் மட்டும் 24 மாணவர் விடுதிகள் இயங்கி , வருகின்றன. இதில் 3 விடுதிகள் வாடகை கட்டடங்களிலும், 21 விடுதிகள் சொந்த கட்டடங்களிலும் இயங்கி வருகின்றன.


இந்த விடுதிகளை முறையாக, சுகாதாரமான முறையில் பராமரிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் தங்கி, சென்னை மாநிலக் கல்லூரியில் படித்ததாகக் கூறியுள்ள மனுதாரர், தற்போது இந்த விடுதியில் அடிப்படை வசதியும் இல்லை எனவும், சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பட்டியலின மக்கள் நலனுக்காக மத்திய அரசு, 2018-19-ம் ஆண்டில் 47.99 கோடி ரூபாயை ஒதுக்கியதாகவும், அதில் சிறிதளவு கூட மாநில செலவளிக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக கொண்டு வரும் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, நவம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

Also see...

First published: October 19, 2019, 10:45 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading