மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடி புகார் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இரண்டு, இரண்டு மாதங்களாக பிரித்து தனித்தனியாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது

மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடி புகார் - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
மாதிரிப்படம்
  • Share this:
வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் அடுத்த திங்கள்கிழமை பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் 4 மாதங்களுக்கான கட்டணத்தை சேர்த்து பில் போடுவதால் 14 சதவிகிதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

இரண்டு, இரண்டு மாதங்களாக பிரித்து தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு திங்கள்கிழமை தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.Also read... தமிழகத்தில் மே மாதம் 80% சரிந்த வாகன பதிவு - வெறும் 25 வாகனங்கள் மட்டுமே விற்பனை
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading