முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த லோகநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில்,

தமிழகம் முழுவதும் உள்ள ஒன்பது மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணி நேரமாக உள்ளது.

அதுபோல மின் கட்டணம் வசூல் மையம் காலை 8.30 முதல் 2.30 வரை உள்ளது. ஆனால் பெரும்பாலான அலுவலகத்தில் ஊழியர்கள், காலதாமதமாக வருவதால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், அனைத்து மின் வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, நவம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின் வாரியத்துக்கு உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கில் மின்வாரிய தொழிற்சங்கங்களையும் சேர்க்க உத்தரவிட்டு, விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see...

First published:

Tags: TNEB