ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

மாதிரி படம்

மாதிரி படம்

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கள்சூளைகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலை பகுதி பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி சின்ன தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரும், யானைகள் நல ஆர்வலரான முரளிதரனும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நில வளத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கனிம வளத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன், வனத்துறையுடன் கலந்தாலோசித்து விதிமீறல் செங்கல் சூளைகளை கண்டறிய இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

Also read... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கார் பேரணி!

அதனை பதிவுசெய்த நீதிபதிகள், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கள்சூளைகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

அதேபோல யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில்மனுவை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Elephant routes, Madras High court