பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களின் பெயரின்றி அரசாணை வெளியிட உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களின் பெயரின்றி அரசாணை வெளியிட உத்தரவு
மாதிரிப்படம்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே தனது மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரின்றி புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ, ஆடியோ உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் வெளியிட, தணிக்கை முறையை கொண்டுவரக்கோரி திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் உயர்நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது உச்சநீதிமன்ற உத்தரவின்படி தவறானது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அரசாணையை திரும்பப் பெற்று, பெயர் இல்லாமல் புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வீடியோக்களை இணையத்தில் இருந்து தடை செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சமூக ஊடகங்களின் நன்மை, தீமை குறித்து பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் கொண்டு வரலாம் என யோசனை தெரிவித்தனர் நீதிபதிகள்.
வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடைபெற்று வரும் போராட்டங்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே தனது மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் ராஜராஜன், வில்லியம் ஆகியோர் தாக்கல் செய்ய மனுவில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தகவல்களை வெளியிட்ட கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.