• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தாம்பரம் - திண்டிவனம் இடையிலான சாலையின் தற்போதைய நிலை என்ன? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

தாம்பரம் - திண்டிவனம் இடையிலான சாலையின் தற்போதைய நிலை என்ன? தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான சாலையின் நிலைகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதி அமைக்க கோரி மனு...!

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிடும் சாலையின் தற்போதைய நிலை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: