அரசு போக்குவரத்துக் கழக பணிகளுக்கு தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news18
Updated: July 13, 2019, 3:11 PM IST
அரசு போக்குவரத்துக் கழக பணிகளுக்கு தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
உயர் நீதிமன்றம்
news18
Updated: July 13, 2019, 3:11 PM IST
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள திருநெல்வேலியை சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து எந்த கடிதமும் வரவில்லை என்பதால், 248 நாட்கள் பயிற்சி பெற்ற தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கும் படி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும் என கோரியிருந்தார்


இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளபடுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நடத்துனர்கள், ஓட்டுனர்கள், இளநிலை, உதவி பொறியாளர்கள் பணியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி தகுதி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Loading...

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், பி.டி ஆஷா அமர்வு, அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும் எனவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

போக்குவரத்து துறையில், பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என கூறிய நீதிபதிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள் தேர்விற்கு 3 மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மனுதாரருக்கும் இந்த தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக வயது வரம்பை தளர்த்தி அனுமதிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also see...

First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...