ஆன்லைன் கல்வி விதிமுறை வழக்கு - 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்லைன் கல்வி விதிமுறை வழக்கு - 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மாதிரிப் படம்
  • Share this:
ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கும்போது, ஆபாச இணையதளங்களால் அவர்களது கவனம் சிதறுவதாகவும், அந்த இணையதளங்களை முழுமையாக அணுக முடியாத அளவுக்கு விதிகளை வகுக்கும்வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, சென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல், ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு வருவதாகவும் குறிப்பிட்டு விமல் மோகன் என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கானது, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Also read... சென்னையில் பாதுகாப்பு பணியில் கமாண்டோ படை? காவல் ஆணையர் விளக்கம்

அதேபோல, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுத் தரப்பிலும் ஒரு வார காலம் அவகாசம் கோரப்பட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading