ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிகள் உள்ளதா? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன் லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிகளை வகுக்கும் திட்டம் உள்ளதா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிகள் உள்ளதா? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
மாணவ, மாணவியர் ஆபாச இணையதளங்களை அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கேட்டு சென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஆன் லைன் வகுப்புகளை நடத்துவதை எதிர்க்கவில்லை என்றும் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன் லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதும் இல்லை என்றார்.

அதனை அடுத்து, ஆன் லைன் வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகள் உள்ளதா? என்பது குறித்தும், எதிர்காலத்தில் விதிகள் கொண்டு வரும் திட்டம் உள்ளதா என்பது குறித்தும், விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை ஜூன் 25 ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Also read... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்!

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading