மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்காக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் தாரபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய இளங்கோவன், அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி இளங்கோவன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Also read... Chennai Power Cut: சென்னையில் நாளை (09-04-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்றும், ஜெயலலிதா குறித்து தனிப்பட்ட முறையில் பேசியதற்கு அமைச்சர் வழக்கு தொடர முடியாது என இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.