ஸ்டாலின், தினகரனுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை!

இருவர் மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு, இருவரும் நேரில் ஆஜராக விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டார்.

news18
Updated: July 12, 2019, 3:51 PM IST
ஸ்டாலின், தினகரனுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை!
ஸ்டாலின், தினகரன்
news18
Updated: July 12, 2019, 3:51 PM IST
தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அ.ம.மு.க துணை பொது செயலாளர் தினகரன் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பேசியதாக தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

அதே போல, கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரூரில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன், முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கரூர் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

ஸ்டாலின் மீதான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக திண்டுக்கல் நீதிமன்றமும், தினகரன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கரூர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்த நிலையில், தி. மு.க தலைவர் ஸ்டாலின், மற்றும் அ.ம.மு.க துணை பொது செயலாளர் தினகரன் சார்பாக அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராக விலக்கு கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இருவர் மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்ததோடு, இருவரும் நேரில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுக்களுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Also see...
Loading...
First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...