கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை என வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கோப்புப் படம்.

TASMAC | அதிக விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது

 • Share this:
  டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படவில்லை என்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த குல்லு படையாச்சி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

  இதன் மீது கடந்த மாதத்தில் பதில் மனு தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகம், அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் வரையான காலத்தில் வந்த 9,319 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.

  Also read... கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

  இதில், அதிக விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்துள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: