ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்

ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் நீதிபதி கர்ணன்

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஒய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாக பேசி பல விடியோக்களை வெளியிட்டார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் தேவிகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உள்ளிட்டோர் கொடுத்த புகாரில் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி சென்னை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன

இவரது 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் 10 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, தற்போதைய மற்றும் முன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேச மாட்டேன் என்றும், ஊடகம், பத்திரிகை, சமூக ஊடகம் என எதிலும் பதிவேற்றம் செய்ய மாட்டேன் என உத்தரவாதம் அளித்திருந்தார்.

Also read... மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் - தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!

அதனை ஏற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், 10 வழக்குகளிலும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் ஜாமின் ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: