பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்...!

பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்...!
  • News18
  • Last Updated: December 3, 2019, 2:37 PM IST
  • Share this:
அர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் மனுத்தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என். ஷேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்மணி தரப்பில் முன் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை முன் ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரத்தில் தங்கியிருக்க அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் ராமேஷ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும்- ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் செயல் அலுவலர் முன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.Also see...
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading