வாக்காளருக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கே.என்.நேருவுக்கும் முன் ஜாமீன் - சென்னை உயர் நீதிமன்றம்!

கே.என்.நேரு

முன் ஜாமின் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாக்காளருக்கு பணம் கொடுப்பது தொடர்பாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளருமான் கே.என்.நேரு சட்டமன்ற தேர்தலுக்கு முன்
முசிறியில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

அதைத்தொடர்ந்து, முசிறி காவல் நிலையத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் திமுகவின் முதன்மை செயலாளரான கே. என் நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Also read... கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி கே.என்.நேரு தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கே.என் நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, அந்த வீடியோவில் உள்ளதைப் போன்று ஒரு சமபவம் நடைபெறவே இல்லை எனவும் அரசியல் ஆதாயத்திற்காக அதுபோன்று ஒரு வீடியோ பரப்பப்படுவதாகவும், எந்தவித முகாந்திரமும் இன்றி கொலை மிரட்டல் பிரிவையும் சேர்த்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து, வீடியோவில் கே.என்.நேரு யாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என்றும் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்த நீதிபதி, ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகளிளான குற்றச்சாட்டுகள் தான் உள்ளது என தெரிவித்து கே.என் நேருவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: