முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரி வழக்கு- அரசு பதிலளிக்க 15-ம் தேதிவரை அவகாசம்

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரி வழக்கு- அரசு பதிலளிக்க 15-ம் தேதிவரை அவகாசம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15 தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

துப்புரவுப் பணியாளர்களுக்கு இடர்படி வழங்கக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மார்ச் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தோழர் சட்ட மையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த திட்டம் வரவேற்பு பெற்ற போதும், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி தூய்மை செய்யும் போது மரணம் அடைய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்புரவு தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதால், இடர்படி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் மனு அனுப்பியதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலிக்கவும், தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கவும் தமிழக நகராட்சி நிர்வாகம் ஆணையருக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரை மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால் துப்புரவு பணியாளர்களுக்கு இடர்படிகள் வழங்க வேண்டும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

Also read... ஜனவரி 18ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களை முழு அளவில் செயல்பட அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்மானம்!

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை, தீயணைப்பு துறையினருக்கு இடர்படி வழங்கப்படுவதாகவும், துப்புரவுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 15 தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறினால், நீதிமன்றத்துக்கு உதவியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Madras High court