ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்றும் முடிவை எதிர்த்த டிராபிக் ராமசாமி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற தடை கோரிய டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி
டிராபிக் ராமசாமி
  • Share this:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி இருப்பதால், நினைவு இல்லமாக மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டுமென தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



 

அப்போது அரசு தரப்பில், இதே கோரிக்கையுடன் கடந்த மாதம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் அதை எதிர்த்து வழக்கு தொடரும்படி டிராபிக் ராமசாமிக்கு அறிவுறுத்திய போதும், மீண்டும் அவசர சட்டத்தை எதிர்த்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.Also read... நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான நகலுடன் முறையான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading