பலரும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர்... பூரண மதுவிலக்கு வேண்டும்...! உயர் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

கோப்புப்படம்

ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்ட போதிலும், கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும், குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் மனு

  • Share this:
பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த, ஆர்.தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், இந்தியாவில், 33 லட்சம் பேர், மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில், 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட போதும், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்ட போதிலும், கள்ளச்சாராய விற்பனை இல்லை எனவும், குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், மது பழக்கத்தை, பலரும் கைவிட்டு வருவதால், பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஊரடங்கு முடிந்த பின்னும், மனு கடைகளை திறக்கக் கூடாது என, உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாரயணா அமர்வு முன் இன்று, வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்ற தலையிட முடியாது என்று தெரிவித்தார். மேலும், எங்கெல்லாம் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தமிழத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published: