Home /News /tamil-nadu /

பிரபல ரவுடி குணா என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...!

பிரபல ரவுடி குணா என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி...!

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
பிரபல ரவுடி படப்பை குணா, காவல்துறையால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி எல்லம்மாள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

தற்போது தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அவரது மனைவி எல்லாம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் பல மிரட்டல்கள் வருவதாகவும், வழக்குகளில் சரணடைய தனது கணவர் தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Also read... Chennai Power Cut: சென்னையில் இன்று (12-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

இந்த மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அச்சப்படும்வகையில் என்கவுன்டர் திட்டம் ஏதும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

Also read... ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டிஸ் மீது மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்!

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் அனுமானம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் தொடரபட்ட வழக்கு என கூறி, எல்லாமாளின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி