வழக்கறிஞர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் 75% சலுகை கோரிய மனு தள்ளுபடி!

நாடு முழுவதும் பல நீதிமன்றங்களுக்கு பயணம் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் ரயிலில் கட்டண சலுகை வழங்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

வழக்கறிஞர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் 75% சலுகை கோரிய மனு தள்ளுபடி!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 19, 2019, 7:47 PM IST
  • Share this:
வழக்கறிஞர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் 75 சதவிகிதம் சலுகை வழங்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சையது கலீஷா தாக்கல் செய்த மனுவில், மாற்று திறனாளிகள், மூத்த குடிமக்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ரயில் பயண கட்டணத்தில் ரயில்வே துறை சலுகை வழங்கி வருவதை போல, வழக்கறிஞர்களுக்கும் 75 சதவிகித கட்டணச் சலுகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், திரைப்பட படப்பிடிப்பிற்காக செல்லும் திரைத்துறையினருக்கு 75 சதவிகிதமும், மருத்துவர்களுக்கு 10 சதவிகிதமும், காதுகேளாத வாய்பேச முடியாத மாற்று திறனாளிகளுக்கு 50 சதவிகிதமும் கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எந்த அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுகிறது என தெரியவில்லை என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், நாடு முழுவதும் பல நீதிமன்றங்களுக்கு பயணம் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் ரயிலில் கட்டண சலுகை வழங்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Also see...
First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்