மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கோப்புப் படம்

வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று எளிதில் பாதிக்கும் நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Also read... தங்கச்சி பாப்பாவிற்கு பட்டு பாவாடை வாங்க சேமித்த பணம் - முதல்வர் நிவாரணநிதிக்கு அனுப்பிய சிறுமி!

முன்னதாக, தமிழக சட்டமன்ற சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வுக்கு பின், ஏராளமான கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முக கவசம் அணியாமலும், தனி மனித விலகலை பின்பற்றாமலும் குவிந்ததாக வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், நிலைமையின் தீவிரத்தை கட்சியினர் உணர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: