Home /News /tamil-nadu /

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை,10 நாட்களுக்கு பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ள, உரிமை கோரப்படாத உடல்களை,10 நாட்களுக்கு பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோல, அடையாளம் காணப்படாத, உரிமை கோரப்படாத உடல்களை மயானங்களில் புதைக்கப்படுவதால், இடப்பற்றாக்குறை ஏற்படுவதாகவும், உடல்களை நீண்ட நாட்கள் மருத்துவமனையில் வைத்திருப்பதன் மூலம், நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாலும், இந்த சடலங்களை தகனம் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஜீவாத்மா கைங்கர்ய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் இரு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், பிரேத பரிசோதனை முடிந்த 10 நாட்களுக்கு பின், காவல் துறை, தொண்டு நிறுவனங்கால் மூலம் சடலங்கள் புதைக்கப்படுவதாகவும், சில சடலங்கள் கல்வி பயன்பாட்டுக்காக மருத்துவ கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also read... தமிழகத்தில் ஆணவ கொலைகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

உடல்களை தகனம் செய்வது என்பது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என தெரிவித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், அதனால் சடலங்கள் புதைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, உரிமை கோரப்படாத உடல்கள் புதைக்கப்படுகிறதா அல்லது தகனம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dead body, Madras High court

அடுத்த செய்தி