சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் - நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019ம் ஆண்டு முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.

Also read... சேலம் பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி!

மேலும், ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும் எனவும், சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்து விசாரனையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: