Home /News /tamil-nadu /

நொளம்பூரில் மழைநீர் வடிகாலை மூடாததால் தாய் - மகள் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் - புகார் மனு மீது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

நொளம்பூரில் மழைநீர் வடிகாலை மூடாததால் தாய் - மகள் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் - புகார் மனு மீது முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

புகார் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  • News18
  • Last Updated :
நொளம்பூர் நெடுஞ்சாலை ஓரம் மழைநீர் வடிகாலை மூடாததால் தாய் - மகள் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் தொடர்பான புகார் மனு மீது முடிவெடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நொளம்பூர் அருகில் மதுரவாயல் புறவழிச்சாலை ஓரம் மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, தனியார் கல்லூரி பேராசிரியர் கரோலின் பிரெசில்லா மற்றும் அவரது மகள் இவாலின் ஆகியோர் பலியாகினர்.

இந்த சம்பவத்தை அடுத்து, மழைநீர் வடிகாலை மூடாமல் அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த இருவருக்கும் கூடுதல் இழப்பீடு வழங்கவும் கோரியும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Also read... அரசு நிலம், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ள வேண்டும் - அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு புதிதாக புகார் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தியது.

அந்த புகார் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court

அடுத்த செய்தி