வழக்கறிஞர் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

வழக்கறிஞர் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பற்றுவதற்தாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்ததாகவும் கொலைக்கு சம்பந்தமில்லாத மூன்று பேரை தற்போது சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வழக்கறிஞர் கொலை வழக்கின் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முனியூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ் குமார் என்பவர் நீட்டாமங்கள நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் மாதம் கட்டையடி என்ற இடத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அரித்துவார மங்களம் உதவி ஆய்வாளர் அன்பழகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரின் மனைவி சந்தியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Also read... வேளச்சேரி நீர்வழிப் பாதையின் ஆக்கிரமிப்பை கூகுள் படங்கள் மூலம் மதிப்பிட வேண்டும்- வல்லுநர் குழுவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அதில், கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பற்றுவதற்தாக அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையினர் அழித்ததாகவும் கொலைக்கு சம்பந்தமில்லாத மூன்று பேரை தற்போது சிறையில் அடைத்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டினார்.

எனவே, இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த கொலை வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலைஅறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: