முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை!

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகள் நாளை விசாரணை!

எஸ்பி வேலுமணி

எஸ்பி வேலுமணி

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் கடந்த முறை சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராக கூடாது எனவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபங்களை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுக்களை தொடர்ந்து இந்த அமர்வே விசாரிக்கும் எனவும் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டு விசாரணையை இன்றைய தினம் தள்ளி வைத்திருந்தனர்.

Also read... 'ப்ளூ காய்ச்சல் பரவலை தடுக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' - ஓபிஎஸ் வலியுறுத்தல்

இதற்கிடையில் ஆட்சேபங்களை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.

இந்த நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிட வேண்டிய இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை.

இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இந்த வழக்கை பிற்பகல் விசாரிக்க வேண்டும் எனதமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா முறையிட்டார். ஆனால், இந்த வழக்கை  நாளை விசாரிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Madras High court, S.P. Velumani