எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

எம்.பி., எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டுமெனவும், மற்றவர்கள் மீது அவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவற்றை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்து வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. குற்ற மற்றும் அவதூறு வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டிருந்தனர்.

Also read... மோசடி வழக்கில் இயக்குனர் தாக்கல் செய்த முன் ஜாமின் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்த சிறப்பு நீதிமன்றங்களில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டுமெனவும், மற்றவர்கள் மீது இவர்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிக்க கூடாதெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: