வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு: கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

கார்த்தி சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 7,37,00,000 ரூபாய் வருமானத்தை மறைத்ததாக கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015 ஆம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 7,37,00,000 ரூபாய் வருமானத்தை மறைத்ததாக கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Also read... உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாட்டிடம் ஆலோசனை கேட்பது பெருமைக்குரியது - அமைச்சர் விஜயபாஸ்கர்!இந்த உத்தரவை எதிர்த்து கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வருமான வரித்துறை நடைமுறைகள் எதையும் முறையாக பின்பற்றவில்லை எனவும், கடந்த 2015-2016 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கில் சொத்து விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை எனக் குற்றம் சாட்டும் வருமான வரித் துறை, அந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் கணக்குத் தாக்கலில் ஏதேனும் தவறுகள் இருந்தால், அந்த அதிகாரி தான் வழக்குத் தொடர வேண்டும் எனவும், வருமான வரித்துறை துணை இயக்குனர் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: