Home /News /tamil-nadu /

விசாகா குழுவை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யபட்ட சிறப்பு டிஜிபி வழக்கில் ஜனவரி 5ல் இறுதி விசாரணை - உயர் நீதிமன்றம்

விசாகா குழுவை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யபட்ட சிறப்பு டிஜிபி வழக்கில் ஜனவரி 5ல் இறுதி விசாரணை - உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பான விசாகா குழு விசாரணையை எதிர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் விசாரணையில் உள்ளது. விசாகா குழு விசாரணை அறிக்கையும், முடிவுகளும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

Also read... புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் தொடங்கினார்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் விசாரணையை தொடங்கும் ஆறுமுகசாமி ஆணையம்

உதகையில் தொடங்கியது உறைபனி பொழிவு… கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு, தீர்ப்பாய அந்தஸ்தில் உள்ளதால், அதை எதிர்மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

மனுதாரர், விசாகா குழு மீது குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாக கூறி, அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். துறை ரீதியான நடவடிக்கையை தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai High court, Sexual harassment

அடுத்த செய்தி