எம்.பி., கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு...!

எம்.பி., கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு...!

எம்.பி., கனிமொழி கருணாநிதி

வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக எம்பி கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரது வெற்றியை பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி அந்த தொகுதியில் பா.ஜ. சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், அத்தொகுதி வாக்காளர் சந்தானகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி முத்துராமலிங்கம் என்பவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Also read... தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பிறகு ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் மனு!

வாக்காளர் சந்தான குமார் தொடர்ந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்குகள் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

வழக்குகளை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைச் சுட்டிக்காட்டி, கனிமொழிக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளின் விசாரணையையும், மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: