ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின்!

எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பரப்பிய தகவல் ஆதாரமற்றது என வாட்ஸ் அப்-ல் பதிவிடுவதாக, உறுதி அளித்ததால், இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிமுகம் செய்து வைத்தார். இந்த திட்டம் மக்களுக்கு உகந்தது அல்ல எனவும், இந்த திட்டத்தால் பல நோய்கள் பரவும் என்பன உள்ளிட்ட சோலார் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் வாட்ஸ் ஆப்-பில் பரப்பியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி ஜாகீர் உசேன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, எந்த வித ஆதாரமும் இல்லாமல் இந்த தகவலை பரப்பியதாக, அதே வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவிட சம்மதித்தால், ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தான் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய தகவல் தவறானது என்றும் ஆதரமற்றது என வாட்ஸ் ஆப் மூலம் மறுப்பு தெரிவிப்பதாகக் கூறி மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜாகீர் உசேனுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: S.P. Velumani