தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு: செந்தில் பாலாஜி, ஜோதிமணிக்கு முன் ஜாமின்!

செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி

இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரின் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது.

  கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு செந்தில் பாலாஜி சென்றிருந்தார்.

  இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக செந்தில் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேரின் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

  இதையடுத்து, தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வாரத்தில் 3 நாட்கள் தாந்தோன்றி மலை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டது.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: