அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு: மா.சுப்பிரமணியனுக்கு ஜாமின்!

அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.

news18
Updated: June 25, 2019, 4:59 PM IST
அரசு நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு: மா.சுப்பிரமணியனுக்கு ஜாமின்!
திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன்
news18
Updated: June 25, 2019, 4:59 PM IST
அரசு நிலத்தை அபகரித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

இதுசம்பந்தமான வழக்கில் காவல் துறையினர் தங்களை கைது செய்யக் கூடும் எனக் கூறி, மா.சுப்ரமணியனும், அவரது மனைவியும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது, மா.சுப்பிரமணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் மனுதாரர்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர்கள் போலி ஆவணங்கள் மற்றும் கையெழுத்து மூலம் அரசு நிலத்தை அபகரித்துள்ளனர் என்றும், அவ்வாறு அபகரிக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட 3 மாடி கட்டிடம் விதிகளுக்கு புறம்பாகவும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

புகார் தாரரான பார்த்திபன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேயராக இருந்த மா.சுப்பிரமணியம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் போலி ஆவணங்கள் மூலமாக விதிகளுக்குப் புறம்பாக அரசு நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், தேவைப்படும் போது காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி இன்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
Loading...
Also see...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...