உடல்நலம் குன்றிய யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி

news18
Updated: April 16, 2018, 1:31 PM IST
உடல்நலம் குன்றிய யானையை கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி
உடல்நலம் குன்றிய யானை ராஜேஸ்வரி
news18
Updated: April 16, 2018, 1:31 PM IST
சேலம்  சுகவனேஸ்வரர் கோயிலில், உடல்நலம் குன்றிய யானையை கருணை கொலை செய்யலாம்  என சேலம் கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதான பெண் யானை ராஜேஸ்வரி  பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பிப் படுக்க முடியாமலும், படுத்த படுக்கையாக இருந்து வருகிறது. உணவு எதுவும் உண்ணாமல், மிகவும் கவலைக்கிடமான நிலையில், யானைக்கு தொடர்ந்து சிகிச்சையளித்தும் அது பயன்தரவில்லை. மேலும் யானையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே வருகிறது.

எனவே, யானையை கருணைக்  கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்றி யானையைக் கருணை  கொலை செய்யலாம்’ எனவும் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்