ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...!

ஜெயலலிதா நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, நினைவில்ல திறப்புவிழாவை நடத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் துவக்கவிழாவுக்கு பின் போயஸ்தோட்ட இல்ல சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், உத்தரவிட்டிருந்தார்.

இந்த இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்ற உத்தரவு மட்டும் அப்படியே தொடரும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ் அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து,இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்து என வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரணையில் இருப்பதால், அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Also read... Chennai Power Cut | சென்னையில் நாளை (20-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்புள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக்கொள்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்த்தி, தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில்,தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் மீது இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவுகள், தனி நீதிபதியிடம் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை தொடரும் என தெளிவுபடுத்தியுள்ளனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Jayalalithaa