ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள், கனகசபை மண்டபத்தில் இருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தான் கனகசபை மண்டபத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

Also read... புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

இதையடுத்து, கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் எந்த பொது நலனும் இல்லை எனவும் கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

First published:

Tags: Madras High court