#Breaking | ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனி குழு - வேதாந்தாவின் கோரிக்கை நிராகரிப்பு

கோப்புப் படம்

வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க தனி குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், ஆலையை பராமரிப்பு பணிகளுக்காக திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில், ஆலையை பராமரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என்று வேதாந்தா கோரிக்கை வைத்தது.

    இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வேதாந்தாவின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

    தமிழக அரசு ஆலையை பராமரிக்க பல குழுக்களை அமைத்துள்ளதாக விளக்கம் அளித்தது. இதனை, ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    படிக்க... 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் ஆலை: மகாராஷ்டிரா முதல் தூத்துக்குடி வரை

    வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

    Published by:Sankar
    First published: