கனரக சரக்கு வாகன கட்டமைப்பு தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தை பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்துகளை தவிர்க்கவும், எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கவும் கனரக சரக்கு வாகனங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து, அவற்றை சட்டமாக இயற்றிய மத்திய அரசு அதனை கடந்த 2019ம் ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டது.
அந்த வழிமுறைகளை தமிழக அரசோ, வாகனங்களை பதிவு செய்யும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களோ பின்பற்றவில்லை என்பதால், மத்திய அரசு சட்டத்தை பின்பற்ற உத்தரவிடக் கோரி கனரக சரக்கு வாகன தொழிலில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த சுஜித் பிரபு துரை என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பொதுநலனோ அல்லது தனிப்பட்ட நலனோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களோ இல்லாமால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
Also read... Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் (04-04-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!
எந்த வித ஆதாரங்களும் இன்றி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆதாரங்களை சமர்பிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டும் ஆதாரங்களை தாக்கல் செய்யாததால் கூறி 25,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த அபராத தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madras High court