Home /News /tamil-nadu /

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ்!

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ்!

லஞ்ச ஒழிப்பு துறை

லஞ்ச ஒழிப்பு துறை

அரசுத்தரப்பில், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகள் நடத்தி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைக்க கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநில, மாவட்ட அளவில் ஊழலை தடுக்க பறக்கும் படைகள் அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனைகள் நடத்தி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Also read... முதன்மை காவலரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை!

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படைகள் அமைப்பது குறித்து அரசு நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் அனுமதி கோரியதை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Directorate of Vigilance and Anti-Corruption, Madras High court

அடுத்த செய்தி