HOME»NEWS»TAMIL-NADU»hc dismissed a petition seeking action against those who illegally placed banners during visit of amit shah vin
அமித்ஷா வருகையின் போது விதிகளை மீறி பேனர் - நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு பொது நல நோக்குடன் தொடரப்பட்டதாக தெரியவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்டுள்ளதாக கூறி, டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது விதிமீறி பேனர்கள் வைத்தோர் மீது நடவடிக்கை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை வரவேற்று மாநகரம் முழுவதும் விதிமீறி பேனர்கள் வைத்தவர்கள் மீதும், விதிமுறைகளை மீறி ஒன்று கூடியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர், காவல்துறையிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி புகார் அளித்திருந்தார்.
அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜய் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.