மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி...!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு தள்ளுபடி...!

ஜெயலலிதா நினைவிடம்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக மெரினாவில் கட்டப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில், அவரது நினைவிடம் கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானங்களும் எழுப்பக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also read... நீட் தேர்விற்காக தமிழகத்தில் கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு...!

நினைவிடம் எழுப்ப மத்திய மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புதலை பெற்றிருக்க வாய்ப்பில்லை எனக் கூறியுள்ள அவர், நினைவிடத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயல்லிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்குகளை ஏற்கனவே உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

சிறந்த கதைகள்