தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி...!

சென்னை உயர் நீதிமன்றம்

பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுவதாகவும், முதியோரை கட்டிப்பிடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு தடையும் விதித்துள்ளது.

தென்காசியைச் சேர்ந்த வழக்கறிஞர் பால்ராஜ் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்யக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் 4,512 வேட்பாளர்களும் மருத்துவ பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், குழந்தைகளை முத்தமிடுவதாகவும், முதியோரை கட்டிப்பிடிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அவர்கள் மூலம் கொரோனா பரவல் அதிகமாகும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Also read... சட்ட மன்ற தேர்தலில் 15 வருட பழமையான மின்னனு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது - தேர்தல் ஆணையம் விளக்கம்!

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உள்நோக்கத்துடன் அற்ப காரணங்களுக்காக, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மனுதாரருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அடுத்த ஓராண்டுக்கு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: