மே 2ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு
தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்த போதும் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பணபட்டுவாடா நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பல தொகுதிகளில் நடந்த பணபட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துளாதாகவும் கூறியுள்ளார்.
பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும் அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
Also read... QR Code ஸ்கேனில் பணம் திருடும் ஆன்லைன் மோசடி கும்பல் - SBI எச்சரிக்கை!
இந்த மனு தலைமை
நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விரைவில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க உயர் நீதிமன்றமோ தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், விளம்பரத்திற்காக கிருஷ்ணசாமி இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இனி இது போன்று அற்ப காரணங்களுடன் வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.