Home /News /tamil-nadu /

சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி!

வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

  • News18
  • Last Updated :
கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனை விட, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1600 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கோவை தெற்கு தொகுதியைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியை சேர்ந்த கே.ராகுல் காந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also read... தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் தேர்தல் வழக்கில், எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: BJP, Madras High court, Vanathi srinivasan

அடுத்த செய்தி