HOME»NEWS»TAMIL-NADU»hc directed the govt to file a report on the steps taken by the government office photos of the president and pm vin

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க வேண்டும் என மனு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க வேண்டும் என மனு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated :
  • Share this:

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க வகை செய்யும் அரசாணையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு அலுவலகங்களில், மகாத்மா காந்தி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, ராஜாஜி, பெரியார் படங்களுடன், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்களை வைக்க கூறி, 1978ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் படங்களை வைக்க உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஜெயகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத்தாக்கல் செய்திருந்தார்.



அதில், 1990ம் ஆண்டு அம்பேத்கர் படமும், 2006ம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ.உ.சி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர், தமிழன்னை புகைப்படங்கள் வைக்க அனுமதித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழக அரசு அரசாணை பிறப்பித்தும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில், குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

Also read... 9 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள் - மகிழ்ச்சியுடன் சென்ற மாணவர்கள்!

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணை பிறப்பித்து இத்தனை ஆண்டுகளுக்கு பின் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் தெரிவித்தார்.

மேலும், மனு குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். இதை ஏற்று வழக்கை ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் படங்கள் வைக்க வகை செய்துள்ள அரசாணையின்படி எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: