Home /News /tamil-nadu /

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை முடிக்க எத்தனை காலம் ஆகும்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை முடிக்க எத்தனை காலம் ஆகும்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்

தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை முடிக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்பது குறித்து பதிலளிக்க கீழமை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணமடைந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி ஜெயராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதமே உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வழக்கை விசாரித்து முடிக்க இயலவில்லை என்றும் கூடுதல் அவகாசம் கேட்டும் கீழமை நீதிமன்றம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    Also read... சதுரங்க வேட்டை பாணியில் தஞ்சையில் நடந்த சம்பவம் - பல கோடி மோசடி செய்த கும்பல்

    இந்நிலையில் வழக்கின் தற்போதைய நிலை குறித்தும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Madras High court, Sathankulam

    அடுத்த செய்தி